செய்திகள்

அதிநவீன தொழில்நுட்பத்தில் புதுவித டிஸ்ப்ளேவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்

Published On 2018-12-19 13:56 IST   |   Update On 2018-12-19 13:56:00 IST
சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களில் முற்றிலும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட டிஸ்ப்ளேக்களை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Samsung #hologram



சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களில் வழங்க புதிய ஹாலோகிராம் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாலோகிராம் தொழில்நுட்பம் முப்பரிமான முறையில் படங்களை பிரதிபலிக்கும் தன்மை கொண்டதாகும். ஸ்டார் வார்ஸ் ஹாலிவுட் திரைப்படத்தின் சில காட்சிகளில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

தென் கொரிய நிறுவனமான சாம்சங் சார்பில் சர்வதேச காப்புரிமை அலுவலகம் (World Intellectual Property Office) மற்றும் அமெரிக்க காப்புரிமை அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் காப்புரிமைகளில் இருந்து இந்த தகவல்கள் கிடைத்துள்ளது. சாம்சங் பதிவு செய்திருக்கும் காப்புரிமை ‘hologram reproducing apparatus and method therof’  என்ற தலைப்பு கொண்டுள்ளது.

நவம்பர் 29, 2018 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு இருக்கும் இந்த காப்புரிமையில் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் இருந்தபடி 3D படம் காற்றில் ஒளிபரப்ப முடியும் என தகவல் வெளியாகியுள்ளது. 

காப்புரிமை விவரங்களின் படி சாம்சங் நிறுவனம் மொபைல் போன் டிஸ்ப்ளேவில் இருக்கும் பல்வேறு மைக்ரோலென்ஸ்களின் உதவியோடு 3D புகைப்படத்தை காற்றில் ஒளிபரப்புவதற்கான சாத்தியக்கூறுகளை முயற்சித்து வருவதாக தெரிகிறது.


புகைப்படம் நன்றி: LetsGoDigital

இந்த தொழில்நுட்பம் ஹாலோகிராம் ரீப்ரோடியூசிங் டிஸ்ப்ளே (Hologram Reproducing Display) என அழைக்கப்படுகிறது. இந்த காப்புரிமையில் வெளியாகி இருக்கும் தொழில்நுட்பம் எதிர்கால சாதனங்களில் வழங்கப்படலாம் என்ற வாக்கில், இந்த விவரங்கள் தொழில்நுட்பத்தின் ஆரம்பக்கட்ட பணிகளின் போதே வெளியாகியிருக்கிறது.

அதிநவீன ஹாலோகிராம் டிஸ்ப்ளேவானாது, 3D படங்களை பிரத்யேக ஸ்பேஷியல் லைட் மாட்யூலேட்டர் (SLM) மற்றும் ஃபில்ட்டர் உள்ளிட்டவற்றின் உதவியோடு மிகவும் நேர்த்தியாக ஒளிபரப்பும் என்றே தெரிகிறது. இந்த காப்புரிமைகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சாம்சங் இவற்றை தனது கேலக்ஸி எஸ் சீரிஸ் பத்தாவது ஆண்டு ஸ்மார்ட்போன்களில் வழங்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இதுவரை இதுபோன்ற தொழில்நுட்பத்தை வழங்கும் ஒற்றை ஸ்மார்ட்போன் மாடலாக ரெட் ஹைட்ரஜன் ஒன் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3D ஹாலோகிராம் படங்களை ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே மூலம் தேர்வு செய்யப்பட்ட சில செயலிகளில் மட்டும் வழங்குகிறது.
Tags:    

Similar News