செய்திகள்

ஜியோபோனில் வாட்ஸ்அப் வசதி வழங்கப்படுகிறது

Published On 2018-09-11 04:26 GMT   |   Update On 2018-09-11 04:26 GMT
ஜியோபோன் சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. கை ஓ.எஸ். மூலம் இயங்கும் ஜியோபோனிற்கு ஏற்ப வாட்ஸ்அப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. #WhatsApp #JioPhone



கை ஓ.எஸ். மூலம் இயங்கும் ஜியோபோன்களுக்கு வாட்ஸ்அப் வசதி சேர்க்கப்படுகிறது. ஜூலை மாதம் நடைபெற்ற ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோபோனிற்கு வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் செயலிகள் ஆகஸ்டு 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

ஒருமாத தாமதத்திற்கு பின் வாட்ஸ்அப் வசதி தற்சமயம் சேர்க்கப்பட்டுள்ளது. கை ஓ.எஸ்.-க்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. 

இதனால் ஜியோபோனில் வாட்ஸ்அப் சேவை சீராக பயன்படுத்த முடியும். ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 மாடல்களுக்கு வாட்ஸ்அப் செயலியை ஜியோ ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ள முடியும். 

செப்டம்பர் 20-ம் தேதி முதல் அனைத்து ஜியோபோன்களுக்கும் வாட்ஸ்அப் செயலி வழங்கப்படுகிறது. ஒரு முறை டவுன்லோடு செய்து விட்டால், பயனர்கள் தங்களது மொபைல் போன் நம்பரை ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

மொபைல் நம்பரை வாட்ஸ்அப் செயலியில் உறுதிப்படுத்தியதும் விரும்பியவர்களுடன் சாட் செய்யலாம். ஜியோபோனில் வாட்ஸ்அப் வழங்கப்படுவதைத் தொடர்ந்து கை ஓ.எஸ். மூலம் இயங்கும் நோக்கியா 8110 4ஜி மொபைலிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News