செய்திகள்

கேரள வெள்ளம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பெர்சன் ஃபைன்டர் டூல் ஆக்டிவேட் செய்த கூகுள்

Published On 2018-08-17 12:23 IST   |   Update On 2018-08-17 12:23:00 IST
கேரளாவில் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவும் நோக்கில் கூகுள் பெர்சன் ஃபைன்டர் டூல் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. இந்த டூல் பயன்படுத்தி இயற்கை பேரிடரில் சிக்கித்தவிப்போரை கண்டுபிடிக்க முடியும். #keralafloods #personfinder


கேரள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கித்தவித்த சுமார் 1.65 லட்சம் பேர் மீட்கப்பட்டு 1155 மீட்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக சுமார் 2500-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்ததோடு, சில வீடுகள் முற்றிலும் தரைமட்டமாக இடிந்து விழுந்துள்ளன.

இயற்கை பேரழிவில் சிக்கித்தவிக்கும் கேரள மக்களுக்கு உதவியாக இருக்கும் நோக்கில், கூகுளின் பெர்சன் ஃபைன்டர் டூல் (Google Person Finder) ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, வெள்ள பாதிப்புகளில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவும், கண்டெடுக்கப்பட்டவர் குறித்து தகவல் அளிக்கவும் முடியும்.



கூகுள் பெர்சன் ஃபைன்டர் டூல் பயன்படுத்துவது எப்படி?

கூகுளின் பெர்சன் ஃபைன்டர் டூல் மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டர் மூலம் பயன்படுத்த முடியும். அவசர சூழ்நிலைகளில் பாதுகாப்பு தகவல்களை எவ்வாறு தேட வேண்டும் என்றும், எப்படி தகவல்களை வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து பார்ப்போம்.

- முதலில் கூகுளின் பெர்சன் ஃபைன்டர் டூல் பயன்படுத்த http://g.co/pf என்ற இணைய முகவரிக்கு சென்று, வலைத்தளத்தின் இடதுபுறம் காணப்படும் பேரழின் பெயயர் (கேரளா வெள்ளம்) தேர்வு செய்ய வேண்டும்.

- இனி உங்களிடம் தகவல் இருந்தால் அதை வழங்குவதற்கும், யாரேனும் காணாமல் போனது குறித்த தகவல் வழங்க என இரண்டு ஆப்ஷன் காணப்படும்.

-  காணாமல் போனவரை தேட அதற்கான ஆப்ஷனை க்ளிக் செய்து, பெயரை பதிவிட்டு சர்ச் செய்யக் கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். ஒவ்வொருத்தரின் முழு விவரங்களை அறிந்து கொள்ள ஒவ்வொரு பதிவையும் க்ளிக் செய்யலாம்.

- ஒருவரின் பாதுகாப்பு விவரத்தை அறிந்து கொள்ள முடியும். தகவல்களை தொடர்ந்து பெற (Receive new arrival information of this person by e-mail) ஆப்ஷனை க்ளிக் செய்து, மின்னஞ்சலை பதிவு செய்ய வேண்டும். இனி குறிப்பிட்ட நபர் குறித்து வரும் தகவல்கள் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.
Tags:    

Similar News