தமிழ்நாடு செய்திகள்
null

NDA கூட்டணிக்கு பல கட்சிகள் வரும்... விஜய்க்கு வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா? - குஷ்பு

Published On 2026-01-08 18:48 IST   |   Update On 2026-01-08 18:49:00 IST
  • ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததற்கு பாஜக தான் காரணமா?
  • கூட்டணிக்கு விஜயை இழுக்கவே பாஜக இவ்வாறு செய்கிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.

விஜய் நடிப்பில் நாளை வெளியாக இருந்த படம் 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டது.

ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததற்கு பாஜக தான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. கூட்டணிக்கு விஜயை இழுக்கவே பாஜக இவ்வாறு செய்கிறது என்று விமர்சங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக நிர்வாகி குஷ்பூ, "விஜய் மிகப்பெரிய நடிகர் என்பதால் அவரை பார்க்க கூட்டம் வரதான் செய்யும். ஆனால் அதெல்லாம் தேர்தலில் ஓட்டாக மாறுமா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். NDA கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதால் மேலும் பல கட்சிகள் கூட்டணிக்கு வரும்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News