தமிழ்நாடு செய்திகள்

பிரதமரின் திட்டதை புறக்கணித்து "எல்லார்க்கும் எல்லாம்" திட்டம் ஏன்? முதலமைச்சர் விளக்கம்

Published On 2025-04-19 17:09 IST   |   Update On 2025-04-19 17:09:00 IST
  • பள்ளி முடித்துக் கல்லூரி செல்லும் 18 வயதிலேயே 'பரம்பரைத் தொழிலைச் செய்' என்பது விஸ்கர்மா திட்டம்.
  • காலாகாலமாகக் குடும்பம் செய்துவந்த தொழிலுக்குத்தான் விஸ்வர்கமா திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

இன்னார்க்கு இதுதான் என்ற பிரதமரின் விஷ்வகர்மா திட்டத்தை புறக்கணித்து எல்லார்க்கும் எல்லாம் என்ற கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்த வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

'இன்னார்க்கு இதுதான்' எனும் பிரதமரின் விஷ்வகர்மா திட்டத்தை நிராகரித்து, 'எல்லார்க்கும் எல்லாம்' எனும் நம் திராவிட மாடல் அரசு கலைஞர் கைவினைத்திட்டம் உருவாக்கியது ஏன்?

* பள்ளி முடித்துக் கல்லூரி செல்லும் 18 வயதிலேயே 'பரம்பரைத் தொழிலைச் செய்' என்பது விஸ்கர்மா திட்டம். முதிர்ச்சி பெற்ற 35 வயதை எட்டியோர்தான் விண்ணப்பிக்க முடியும் என்பது நம் திட்டம்.

* காலாகாலமாகக் குடும்பம் செய்துவந்த தொழிலுக்குத்தான் விஸ்வர்கமா திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். யாரும், விரும்பிய எந்தத் தொழிலையும் செய்யக் கலைஞர் கைவினைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

* 18 திட்டங்களை உள்ளடக்கியது விஸ்வகர்மா, அதனை 25 திட்டங்களாக நாம் விரிவுபடுத்தியிருக்கிறோம்.

* விஸ்வகர்மா திட்டத்தில் கடன் மட்டுமே பெற இயலும், கலைஞர் கைவினைத் திட்டத்தில் மானியத்தோடு 3 லட்சம் ரூபாய் வரை கடனுதவி பெறலாம்.

மொத்தத்தில், குடும்பத் தொழிலை ஊக்குவித்து, நம் மாணவர்களின் உயர்கல்விக்குத் தடை ஏற்படுத்தும் சூழ்ச்சித் திட்டமல்ல நம்முடையது; யாரையும் ஒதுக்காத அனைவருக்குமான சமூகநீதி நோக்கிலான திட்டம்!

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News