தமிழ்நாடு செய்திகள்

கள்ளக்குறிச்சிக்கு No கரூருக்கு Yes ஏன்? - இ.பி.எஸ். கேள்விக்கு முதலமைச்சர் பதில்

Published On 2025-10-15 12:41 IST   |   Update On 2025-10-15 12:41:00 IST
  • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தார்கள்.
  • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அதிகாரிகள் பேட்டி கொடுக்கவில்லையா?

கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியானபோது கள்ளக்குறிச்சி செல்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூருக்கு விரைந்து சென்றது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தார்கள். ஆனால் கரூரில் அப்பாவி மக்கள் இறந்ததால் அங்கு சென்றேன்.

கரூரில் கூட்ட நெரிசலில் அப்பாவி பொதுமக்கள் மிதிபட்டு இறந்ததால் அங்கு உடனடியாக சென்றேன்.

ஒருநபர் ஆணையம் அமைத்த உடனேயே அதிகாரிகள் சம்பவம் குறித்து பேட்டி அளித்தது ஏன் என இ.பி.எஸ். கேள்வி எழுப்பினார்.

அதற்கு, கரூர் விவகாரத்தை திட்டமிட்டு அரசியலாக்கி பொதுவெளியில் வதந்திகள் பரவியதால் தான் அதிகாரிகள் பேட்டி அளித்தனர்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அதிகாரிகள் பேட்டி கொடுக்கவில்லையா?

கரூர் சம்பவம் தொடர்பாக அரசியல் ரீதியாக இல்லை, அலுவல் ரீதியாக மட்டும்தான் அதிகாரிகள் பேட்டி அளித்தனர் என்று கூறினார்.

Tags:    

Similar News