தமிழ்நாடு செய்திகள்
null

கரூர்ல மட்டும் ஏன் இப்படி நடந்தது?: மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும் - வீடியோ வெளியிட்ட விஜய்

Published On 2025-09-30 16:26 IST   |   Update On 2025-09-30 16:31:00 IST
  • விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
  • கிட்டத்தட்ட 5 மாவட்டத்துக்கு பிரசாரத்துக்கு போனோம். இந்த மாதிரி எதுவுமே நடக்கல

கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், கரூர் துயரம் குறித்து விஜய் முதல்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் அவர் 5 நிமிட வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசிய விஜய், "கிட்டத்தட்ட 5 மாவட்டத்துக்கு பிரசாரத்துக்கு போனோம். இந்த மாதிரி எதுவுமே நடக்கல, ஆனா கரூர்ல மட்டும் ஏன் இப்படி நடக்குது... எப்படி?

மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாத்தையும் பார்த்துட்டு தான் இருக்காங்க.

கரூரை சேர்ந்த மக்கள் எல்லாம் இந்த உண்மையை வெளியே சொல்லும்போது... எனக்கு கடவுளே நேரில் வந்து சொன்னது போல தோணுச்சு. சீக்கிரமே எல்லா உண்மையும் வெளியே வரும்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News