தமிழ்நாடு செய்திகள்

விவசாயத்திற்கும், மீனவர்களுக்கும் தி.மு.க. செய்தது என்ன?- எடப்பாடி பழனிசாமி

Published On 2025-07-23 22:01 IST   |   Update On 2025-07-23 22:01:00 IST
  • அதிமுக ஆட்சியில் தென்னை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 2.64 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
  • அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீன்பிடித் தடைக்கால தொகை உயர்த்தி வழங்கப்படும்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது அவர் உரையாற்றியதாவது:-

திமுக ஆட்சியில் விவசாயிகள் அனுபவிக்கும் கஷ்டம், நஷ்டம், துயரத்தை நான் அறிவேன். உடலுக்கு உயிர் போல விவசாயத்திற்கு உயிரான நீரை உரிய நேரத்தில் தருவோம்.

அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மை சிறப்பாக கையாளப்பட்டது, நீரில்லை என்றால் டெல்டா பகுதி பாலைவனமாகி விடும்.

நடவு மானியம், உழவு மானியம், குறுவை, சம்பா தொகுப்புகள் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டன.

அதிமுக ஆட்சியில் தென்னை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 2.64 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீன்பிடித் தடைக்கால தொகை உயர்த்தி வழங்கப்படும்.

விவசாயத்திற்கும், மீனவர்களுக்கும் தி.மு.க. செய்தது என்ன?

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றிபெறும்.

மாதந்தோறும் மின் கட்டண கணக்கீடு, கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை.

திமுக ஆட்சியில் கிட்னி திருடப்படுகிறது. திமுக ஆட்சியில் மருத்துவமனைக்கு உயிரோடு போகிறவர்கள் உயிரில்லாமல் வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News