தமிழ்நாடு செய்திகள்

கரூரில் நடந்தது மிகவும் வருந்தத்தக்கது- மத்திய அமைச்சர் எல்.முருகன்

Published On 2025-09-28 15:04 IST   |   Update On 2025-09-28 15:04:00 IST
  • மத்திய அமைச்சர் எல்.முருகன் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
  • மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கத்திற்கு, தமிழக அரசு பதில் கொடுக்க வேண்டும்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இன்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கரூரில் நேற்று இரவு நடந்த சம்பவம், மிகவும் வருந்தத்தக்கது. அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. ஆனால் இந்த சம்பவம் நடந்துவிட்டது.

அந்தக் கூட்ட நெரிசலில் பல பேர், தங்களது இன்னுயிரை இழந்து உள்ளனர். அவர்களின் குடும்பத்தாருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று இரவு உடனடியாக, முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொடர்பு கொண்டு, நிலைமையை கேட்டறிந்து, தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்து உள்ளார்.

அதோடு மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து, இந்த கரூர் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசிடம் விளக்கம் ஒன்று கேட்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கத்திற்கு, தமிழக அரசு பதில் கொடுக்க வேண்டும். அவ்வாறு பதில் கொடுத்த பிறகு, அதைப்பற்றி விவரமாக பேசலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News