தமிழ்நாடு செய்திகள்

பூந்தமல்லி அருகே தண்ணீர் லாரி மோதி விபத்து- 2 பேர் பலி

Published On 2025-07-31 10:49 IST   |   Update On 2025-07-31 10:49:00 IST
  • விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  • விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பூந்தமல்லி அருகே தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி மோதி 2 பேர் பலியாகினர்.

சென்னீர்குப்பத்தில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு சென்னை நோக்கி சென்ற தண்ணீர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் நடந்து சென்ற இளைஞர் மற்றும் ஒரு பெண் மீது மோதியது.

இந்த விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தேவி என்ற பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

தண்ணீர் லாரி ஓட்டுநரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள், ஓட்டுநர் போதையில் இருந்ததே விபத்திற்கு காரணம் என குற்றம்சாட்டினர்.

விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி என தகவல் வெளியாகி உள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News