தமிழ்நாடு செய்திகள்

நீரடித்து நீர் விலகாது..!- மல்லை சத்யா, துரை வைகோ குறித்து வைகோ பேச்சு

Published On 2025-04-20 17:49 IST   |   Update On 2025-04-20 17:49:00 IST
  • ஒற்றுமையாக இருந்து இயக்கத்தை வலுப்படுத்துவோம் என இருவரும் தெரிவித்துள்ளனர்.
  • இருவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி இணைந்து பணியாற்றுவோம் என உறுதி அளித்தனர்.

மதிமுக நிர்வாக குழு மேடையில் துரை வைகோவையும், மல்லை சத்யாவையும் வைகோ சமாதானம் செய்து வைத்தார். பின்னர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச சந்தித்து பேசினார்.

அப்போது" நீரடித்து நீர் விலகாது" என்று மல்லை சத்யா, துரை வைகோ கருத்து வேறுபாடு குறித்து வைகோ விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

துரை வைகோ- மல்லை சத்யா இடையேயான கருத்து வேறுபாடு குறித்து பல்வேறு கருத்துகள் நிலவின. துரை வைகோவும், மல்லை சத்யாவும் மனம் விட்டு பேசினார்கள். பிரச்சனையை நாகரிகமாக கையாண்டார்கள்.

இனி இதுபோன்ற சூழலுக்கு இடம் கொடுக்க போவதில்லை என மல்லை சத்யா உறுதிமொழி அளித்துள்ளார்.

முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கு பக்கபலமாக இருப்பேன் என மல்லை சத்யா உறுதி அளித்துள்ளார்.

ஒற்றுமையாக இருந்து இயக்கத்தை வலுப்படுத்துவோம் என இருவரும் தெரிவித்துள்ளனர்.

இருவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி இணைந்து பணியாற்றுவோம் என உறுதி அளித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், மதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் மாதம் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News