தமிழ்நாடு செய்திகள்

மழலைச் சிரிப்பினில், மனக்காயம் ஆற்றுபவர்கள்: குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்த விஜய்

Published On 2025-11-14 18:01 IST   |   Update On 2025-11-14 18:01:00 IST
  • விலை மதிப்பில்லாத நம் செல்வங்களின் உரிமைகளை என்றும் காத்திடுவோம்.
  • உங்கள் வண்ணப் புன்னகை என்றும் தொடர வாழ்த்துகிறேன்.

இந்தியா முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வண்ணத்துப் பூச்சிகளாய்ப் பறப்பவர்கள்! வெள்ளைச் சிரிப்பினில் நம் உள்ளம் நெகிழ வைப்பவர்கள்! மழலைச் சிரிப்பினில், மனக்காயம் ஆற்றுபவர்கள் குழந்தைகள்!

விலை மதிப்பில்லாத நம் செல்வங்களின் உரிமைகளை என்றும் காத்திடுவோம், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்.

கள்ளம் கபடமற்ற நம் மழலைச் செல்வங்களின் கனவுகள் யாவும் நனவாக, எல்லையில்லாக் கற்பனை வானில் சிறகடித்துப் பறக்க, உங்கள் வண்ணப் புன்னகை என்றும் தொடர வாழ்த்துகிறேன்.

Tags:    

Similar News