தமிழ்நாடு செய்திகள்

விஜய் அரசியலில் சாதனை படைப்பார்- மாநாட்டுக்கு வந்த பெண்கள் நம்பிக்கை

Published On 2024-10-26 13:06 IST   |   Update On 2024-10-26 13:06:00 IST
  • நான் சிறிய வயதில் இருந்தே விஜய்யின் தீவிர ரசிகை.
  • நாளை விஜய் பேச்சை நேரில் கேட்பதற்காக மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன்.

சென்னை:

விஜய் மாநாட்டுக்கு தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்து தொண்டர்கள் நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இது மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ரசிகர், ரசிகைகள், கட்சி தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு இன்று காலை வந்துள்ளனர்.

மாநாட்டுக்கு பெங்களூருவில் இருந்து வந்த மோகன பிரியா, மோனிகா, ஐசு ஆகியோர் கையில் தளபதி என டாட்டூ குத்தி விக்கிரவாண்டிக்கு வந்தனர்.

வங்கியில் பணிபுரியும் மோகனப்பிரியா என்பவர் கூறியதாவது:-

நான் சிறிய வயதில் இருந்தே விஜய்யின் தீவிர ரசிகை. அவர் கட்சி தொடங்கியதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். கண்டிப்பாக அரசியலில் விஜய் பெரிய சாதனை படைப்பார்.

மக்களுக்காக பல நல்ல சேவைகளை செய்வார் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அவர் அரசியல் கட்சி தொடங்கிய உடனே பெங்களூரு முகவரியில் இருந்து சென்னை பெரம்பூரில் உள்ள எனது பாட்டி வீட்டு முகவரிக்கு எனது முகவரியை மாற்றி விட்டேன். பெங்களூருவில் இருந்து இன்று காலை மாநாடு திடலை வந்து பார்க்கும்போது பிரமித்து விட்டேன். அந்த அளவுக்கு மாநாடு பந்தல் சிறப்பாக இருக்கிறது.

நாளை விஜய் பேச்சை நேரில் கேட்பதற்காக மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News