தமிழ்நாடு செய்திகள்
அஜித்குமாரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய்
- தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
- விஜயுடன், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உடன் இருந்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது விஜயுடன், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உடன் இருந்தார்.
பின்னர், தவெக தலைவர் விஜய், ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியதாக உயிரிழந்த அஜித்தின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குனு சொன்னாரு. உரிய உதவிகளை செய்வதாக உறுதி அளித்தாகவும் அவர் கூறினார்.