தமிழ்நாடு செய்திகள்

தேசபக்தி, சமூக சேவை எண்ணங்களால் காலங்களை கடந்தும் ஆர்.எஸ்.எஸ். வளரும் - துணை ஜனாதிபதி வாழ்த்து

Published On 2025-10-02 12:41 IST   |   Update On 2025-10-02 12:41:00 IST
  • மிகச் சிறந்த தனி மனிதர்களை உருவாக்குவது ஆர்.எஸ்.எஸ். உடைய தலையாய கடமை.
  • தொலைநோக்கு சமூக பார்வையும் தேச பக்த உணர்வும்தான் இந்த இயக்கத்தின் அடிநாதமாக அமைந்து உள்ளன.

சென்னை:

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவையொட்டி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

இன்று உலகத்தின் மிகப் பெரிய தேச பக்த இயக்கமாக ஆர்.எஸ்.எஸ். தனது நூற்றாண்டினை கொண்டாடுகின்றது. மிகச் சிறந்த தனி மனிதர்களை உருவாக்குவது ஆர்.எஸ்.எஸ். உடைய தலையாய கடமை. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ்.-ன் அத்தனை துணை அமைப்புகளும் பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

தொலைநோக்கு சமூக பார்வையும் தேச பக்த உணர்வும்தான் இந்த இயக்கத்தின் அடிநாதமாக அமைந்து உள்ளன. அதனால்தான் எத்தனையோ எதிர்ப்புகளுக்கு இடையிலும் சமுதாயம் இந்த இயக்கத்தை மனதார ஏற்றுக் கொண்டிருக்கிறது.

பாரதம் உலகின் உன்னத தேசமாக, உலகத்திற்கு வழிகாட்டுகின்ற தேசமாக உலகின் குருவாக உயரும் நாள் தொலைவில் இல்லை. இந்த வேள்வியில் ஆர்.எஸ்.எஸ்.ன் பங்கு மகத்தானது. அது காலத்தைக் கடந்தும் வெற்றிகரமாக தொடரும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News