தமிழ்நாடு செய்திகள்
ஈழ தமிழர்கள் குறித்த த.வெ.க. தலைவர் விஜய் பேச்சை மனதார வரவேற்கிறேன்- வைகோ
- மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- தாயைப்போல பாசம் கொண்ட தலைவன் இல்லாமல் ஏங்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என விஜய் கூறினார்.
சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகத்தில், தமிழ் ஈழ விடுதலை போராளி திலீபன் நினைவு நாளையொட்டி, அவரது படத்திற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் நிருபர்களிடம், வைகோ கூறியதாவது:-
தமிழ் ஈழ வரலாற்றில் அழியாத புகழ்பெற்ற திலீபன் 7 அணு ஆயுத வல்லரசுகளை எதிர்த்து, 7 ஆயிரம் விடுதலைப் புலி வீரர்களை வைத்து தோற்கடித்தார். தாயைப் போல பாசம் கொண்ட தலைவன் இல்லாமல் ஏங்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென த.வெ.க தலைவர் விஜய் தனது பிரசாரத்தில் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, ஈழத் தமிழர்களுக்காக யார் குரல் கொடுத்தாலும் அதை மனதார மெச்சி வரவேற்பதாக வைகோ பதில் அளித்தார்.