தமிழ்நாடு செய்திகள்

பட்ஜெட் 2025- 26 : மத்திய அரசின் முடிவு நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பை அதிகரிக்கும்- அண்ணாமலை

Published On 2025-02-01 12:49 IST   |   Update On 2025-02-01 12:49:00 IST
  • பட்ஜெட்டில், தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பு 7 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை:

2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில், தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பு 7 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி மாதம் 1 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வரி கட்ட தேவையில்லை என்று அறிவித்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

புதிய வரி விதிப்பின் கீழ் ரூ.12 லட்சம் வருமானம் வரை "பூஜ்ஜிய வருமான வரி" அறிவித்ததற்காக, பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு தமிழக பாஜக மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம்.

நமது மத்திய அரசின் இந்த முடிவு நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பை அதிகரிக்கும் மற்றும் எண்ணற்ற குடும்பங்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.



Tags:    

Similar News