ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் வந்ததால் பரபரப்பு
- ஒரே தண்டவாளத்தில் ஒரே நேரத்தில 2 ரெயில்கள் வந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- இது ஒரு முறை அல்ல, நிர்வாக குளறுபடியால் நாள்தோறும் நடக்கும் அவலம் என பயணிகள் புகார் தெரிவித்தனர்.
சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் போக்குவரத்து சேவையில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்காற்றுகிறது.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரெயிலின் சேவை இன்றியமையாதது. அந்தவகையில், தெற்கு ரெயில்வேயின் சென்னை ரெயில்வே கோட்டத்தின் கீழ் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், சென்னை பல்லாவரத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் வந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக 2 மின்சார ரெயில்களும் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஒரே தண்டவாளத்தில் ஒரே நேரத்தில 2 ரெயில்கள் வந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
15 நிமிட இடைவெளியில் வர வேண்டிய மின்சார ரெயில் முன்கூட்டியே வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பயணிகள் கூறுகையில், இது ஒரு முறை அல்ல, நிர்வாக குளறுபடியால் நாள்தோறும் நடக்கும் அவலம் என புகார் தெரிவித்தனர்.