தமிழைக் காக்கும் சேனையை த.வெ.க. தரும்- நாஞ்சில் சம்பத்
- தமிழ்நாட்டைப் போல தாய்மொழியைக் காப்பதற்கான ஒரு போர் உலகில் வேரெந்த தேசத்திலும் நடந்தது இல்லை.
- செந்தமிழைக் காக்கும் சேனை மீண்டும் தேவைப்பட்டால் தவெக தரும். தவெக தலைவர் விஜய் தருவார்.
சாதி, மதம் மனிதனை ஒன்றிணைக்காது; மொழிதான் மனிதனை ஒன்றிணைக்கும் என தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
அப்போது, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நினைவு கூர்ந்து தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் வரலாற்று உரையை நாஞ்சில் சம்பத் நிகழ்த்தினார்.
இதுகுறித்து நாஞ்சில் சம்பத் கூறியதாவது:-
மொழிக்காக தீக்குளித்த மரபு தமிழர்களுக்கு மட்டுமே உரிமை உடைய போர் இந்த போர். நாங்கள் இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கி றோம். இந்தி என்கிற மொழியை எதிர்க்கவில்லை. இந்தி அநீதியின் சின்னம், ஆதிக்கத்தின் சின்னம், மதத்தின் சின்னம், மனு தர்மத்தின் சின்னம், பிரிவி னையின் சின்னம். அதனால் நாங்கள் எதிர்க்கிறோம். என்னுடைய தமிழ் மொழி யின் மீது மேலாதிக்கம் செலுத்துவதற்கு உன்னு டைய மொழிக்கு எந்த தகுதியும் இல்லை.
செந்தமிழ் காக்க சேனை ஒன்று தேவை என்று பாரதி தாசன் பாடினார். செந்தமிழ் காக்க இனி ஒரு சேனை தேவைப்படுமானால் அந்த சேனையை தருகிற இயக்கம் விஜய்யின் வெற்றிக் கழகம்தான். அந்த சேனை எங்களிடம்தான் இருக்கிறது.
நீங்கள் இந்தியை எதிர்ப்ப தாக நாடகம் போடுகிறீர்கள். 40 எம்.பி.க்கள் உங்களுக்கு இருக்கிறார்கள். டெல்லி யுடன் யுத்தம் செய்ய, டெல்லியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களை உடைத்து நொறுக்குகிற படைக்கலன்தான் ஒரு எம்.பி. அந்த கடமையை செய் தீர்களா? நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. உங்கள் நாடகம் முடிவுக்கு வரப் போகிறது.
துரியோதனின் வீழ்ச்சி அவன் தொடையில் இருந்தது. அதிசயம் ஆயிரம் செய்த ஜப்பானின் அன்றைய வீழ்ச்சி அணு குண்டில் இருந்தது.
ஒரு வல்லாதிக்கத்தின் வீழ்ச்சி அண்ணாவின் செந்நாவில் இருந்தது. உய்ய வந்த தமிழினத்தை உய்யாது தடுத்து குடும்ப புற்றில் குடியிருக்கும் பூநாகங்களின் வீழ்ச்சி விஜய்யின் கையில் இருக்கிறது என்பதை வருகிற காலத்தில் எழுதுவதற்கு நாம் மொழிப் போர் தியாகிகள் நினைவு நாளில் சூளுரைப்போம். வருகிற காலம் நம் காலம். எத்தனை தடைகளை போட்டாலும் தகர்த்து முன்னேறுவோம்.
நதி நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது. தேதிகள் கிழிபட உடன்படாவிட்டா லும் நாளை நடக்கும். நாளை விஜய் முதல்-அமைச்சர் ஆவதை எந்த சக்தியும் தடுக்க முடியாது.
விஜய் பேசாமல் இருக்கி றார், ஆனால் விஜய்யை பற்றித்தான் எல்ேலாரும் பேசுகிறார்கள். இப்படி ஒரு வரலாறு எனக்கு தெரிந்து உலக வரலாற்றில் எங்கேயும் இல்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.