தமிழ்நாடு செய்திகள்
21ஆம் தேதி மாநாடு: மதுரை சென்றடைந்தார் த.வெ.க. தலைவர் விஜய்
- நாளை மறுதினம் 2ஆவது மாநில மாநாடு நடைபெறுகிறது.
- இன்று மாநாட்டு பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ஆவது மாநில மாநாடு மதுரையில் நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது. இதற்கான பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தியில் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று மதுரை சென்றுள்ளார். மதுரை சென்றுள்ள அவர் மாநாட்டு பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.