த.வெ.க. மதுரை மாநாட்டிற்கு வந்த அனைவரும் பத்திரமா வீட்டுக்கு போங்க - வீடியோ வெளியிட்ட நடிகர் ஸ்ரீமன்
- மாநாட்டில் விஜய் தனது சொந்த குரலில் பாடிய பாடல் ஒலிக்கப்பட்டது.
- மாநாட்டில் பேசிய விஜய், திமுக, அதிமுக, பாஜக ஆகிய காட்சிகளை விமர்சித்து பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று நடைபெற்றது.
மாநாட்டில் "உங்கள் விஜய், உங்கள் விஜய் உயிரென வரேன் நா" என்று தொடங்கும் விஜய் தனது சொந்த குரலில் பாடிய பாடல் ஒலிக்கப்பட்டது. மாநாட்டில் பேசிய விஜய், திமுக, அதிமுக, பாஜக ஆகிய காட்சிகளை விமர்சித்து பேசினார்.
இந்நிலையில், த.வெ.க. மதுரை மாண்டு குறித்து பேசி விஜயின் நெருங்கிய நண்பரான நடிகர் ஸ்ரீமன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "த.வெ.க. முதல் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான பாக்கியம் எனக்கு கிடைத்தது. நான் நடித்துள்ள கன்னட படம் நாளை வெளியாவதால் என்னால் மதுரை த.வெ.க. மாநாட்டில் கலந்து கொள்ளமுடியவில்லை. இந்த திருவிழாவில் பங்கேற்க முடியவில்லையே என ஆதங்கமாக உள்ளது. இந்த மாநாட்டிற்கு வந்த அத்தனைபேரும் பத்திரமா வீட்டுக்குப் போக வேண்டும் ஏறி விஜயின் பிரார்த்தனையாக இருக்கும். அதனால் அனைவரும் பத்திரமா வீட்டுக்கு போங்க" என்று தெரிவித்தார்.