என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்ரீமன்"
- மாநாட்டில் விஜய் தனது சொந்த குரலில் பாடிய பாடல் ஒலிக்கப்பட்டது.
- மாநாட்டில் பேசிய விஜய், திமுக, அதிமுக, பாஜக ஆகிய காட்சிகளை விமர்சித்து பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று நடைபெற்றது.
மாநாட்டில் "உங்கள் விஜய், உங்கள் விஜய் உயிரென வரேன் நா" என்று தொடங்கும் விஜய் தனது சொந்த குரலில் பாடிய பாடல் ஒலிக்கப்பட்டது. மாநாட்டில் பேசிய விஜய், திமுக, அதிமுக, பாஜக ஆகிய காட்சிகளை விமர்சித்து பேசினார்.
இந்நிலையில், த.வெ.க. மதுரை மாண்டு குறித்து பேசி விஜயின் நெருங்கிய நண்பரான நடிகர் ஸ்ரீமன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "த.வெ.க. முதல் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான பாக்கியம் எனக்கு கிடைத்தது. நான் நடித்துள்ள கன்னட படம் நாளை வெளியாவதால் என்னால் மதுரை த.வெ.க. மாநாட்டில் கலந்து கொள்ளமுடியவில்லை. இந்த திருவிழாவில் பங்கேற்க முடியவில்லையே என ஆதங்கமாக உள்ளது. இந்த மாநாட்டிற்கு வந்த அத்தனைபேரும் பத்திரமா வீட்டுக்குப் போக வேண்டும் ஏறி விஜயின் பிரார்த்தனையாக இருக்கும். அதனால் அனைவரும் பத்திரமா வீட்டுக்கு போங்க" என்று தெரிவித்தார்.
- சென்னையில் நேற்று இரவு முதல் மிக கனமழை பெய்து வருகிறது.
- தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராவார் ஸ்ரீமன்.
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் சென்னை முழுவதும் பல இடங்களிலும் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களுள் ஒருவரான ஸ்ரீமன், கோடம்பாக்கத்தில் உள்ள இயக்குனர் காலனியில் வசித்து வருகிறார். இவரது வீட்டை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இன்னும் அதிக அளவில் கனமழை பெய்தால் வீட்டிற்குள் தண்ணீர் வரும் நிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக அவரது வீட்டை காலி செய்துள்ளார் ஸ்ரீமன்.
அங்கிருந்து அவரது நுங்கம்பாக்கம் வீட்டிற்கு மாறியுள்ளார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் " வெள்ள மீட்பு பணிகளை அரசு சிறப்பாக கையாண்டு வருவதாக நடிகர் ஸ்ரீமன் பாராட்டினார். இப்பொழுது செய்யும் பணிகளை இன்னும் துரிதமாகவும் வேகமாகவும் செய்தால் நன்றாக இருக்கும்.
இங்கு யாரை சொல்லியும் குற்றமில்லை. அரசு அவர்களின் வேலையை சிறப்பாக செய்து வருகின்றனர். இந்த இடத்தில் இன்னும் சில கால்வாய் பணிகளை சீர் செய்தால் அது அடுத்த வருடத்திற்கு உதவியாக இருக்கும் " என தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






