தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு

Published On 2025-09-25 07:53 IST   |   Update On 2025-09-25 07:53:00 IST
  • விஜயின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்திற்கான திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
  • 18 சனிக்கிழமைகள் மற்றும் 2 ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுப்பயணம்.

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தனது முதல் அரசியல் பிரசாரத்தை கடந்த 13-ந்தேதி திருச்சியில் தொடங்கினார். இதனை தொடர்ந்து தனது அரசியல் பிரசாரத்தை நடத்தி வருகிறார். கட்டுக்கடங்காத ரசிகர்கள், தொண்டர்கள் கூட்டத்தால் குறித்த நேரத்தில் விஜயின் பிரசாரத்தை தொடங்க முடியாமல் காலதாமதத்துடன் நடைபெற்றது. இதனால் அவரை காண வரும் ரசிகர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலையும் ஏற்படுகிறது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்திற்கான திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, விஜயின் சுற்றுப்பயணம் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 20-ந்தேதி வரை மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை திட்டமிட்டிருந்த நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 18 சனிக்கிழமைகள் மற்றும் 2 ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுப்பயணம் இருக்கும் என கூறப்படுகிறது. 

Tags:    

Similar News