அரசியல் செய்யவில்லை எனக்கூறி முதலமைச்சர் சட்டசபையில் வன்மத்தை கக்கி உள்ளார்- த.வெ.க. தலைவர் விஜய்
- பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட கோடிகளை கொட்டி வழக்கறிஞர்களை நியமித்துள்ளார் முதலமைச்சர்.
- தமிழக அரசின் தலையில் உச்சநீதிமன்றம் ஓங்கி குட்டு வைத்துள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழக வெற்றிக்கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
என்னுடைய தோழர், தோழிகள், தமிழக மக்களுக்கு வணக்கம்.
* குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனையிலும் வலியிலும் இத்தனை நாட்களாக அமைதியாக இருந்தோம்.
* அமைதி காத்த நேரத்தில் வன்ம அரசியல், அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள் நம் மீது கூறப்பட்டன.
* கரூர் விவகாரம் குறித்து சட்டசபையில் பேசிய முதல்வர் நம் மீது வன்மத்தை கக்கி உள்ளார்.
* சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய உரைக்கு நாகரிக பதிலடி கொடுக்க விரும்புகிறேன்.
* அரசியல் செய்யவில்லை அரசியல் செய்யவில்லை எனக்கூறி முதலமைச்சர் சட்டசபையில் வன்மத்தை கக்கி உள்ளார்.
* பிரசாரத்திற்கான இடத்தேர்வு குறித்த கடைசி வரை இழுத்தடித்து வந்தார்கள்.
* வன்ம அரசியல், அர்த்தமற்ற அவதூறை சட்டம் மற்றும் சத்தியத்தின் துணை மூலம் துடைத்தெறிய போகிறோம்.
* அரசியல் காழ்ப்புடன் நேர்மை திறனற்ற குறுகிய மனம் கொண்ட முதல்வரிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
* பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட கோடிகளை கொட்டி வழக்கறிஞர்களை நியமித்துள்ளார் முதலமைச்சர்.
* இந்தியாவில் யாருக்கும் எந்த தலைவருக்கும் விதிக்கப்படாத நிபந்தனைகள் விதிக்கப்பட்டது ஏன்?
* 50 ஆண்டுகாலமாக பொதுவாழ்வில் உள்ள முதலமைச்சர் பேசியது எவ்வளவு பெரிய வடிகட்டிய பொய்.
* முதல்வர் கூறியது வடிகட்டிய பொய் என நான் கூறவில்லை. உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.
* கரூர் சம்பவத்திற்கு பின் அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
* தனி நபர் ஆணையத்தை தலையில் குட்டு வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டனர்.
* தனி நபர் ஆணையத்தை மறந்து, அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
* தமிழக அரசின் தலையில் உச்சநீதிமன்றம் ஓங்கி குட்டு வைத்துள்ளது.
* பெருந்தன்மையை பெயரளவில் மட்டுமே பேசுகிறார் முதலமைச்சர்.
* எஸ்.ஐ.டி. அமைத்த தனி நீதிபதியின் உத்தரவை கொண்டாடினார்கள்.
* உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளை பார்த்து வாயடைத்துபோனார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.