3-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா: த.வெ.க. தலைவர் விஜய் இன்று வழங்குகிறார்
- த.வெ.க. தலைவர் விஜய் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.
- முதலிடத்தை பெற்ற மாணவிகளுக்கு வைரக் கம்மல் பரிசாக வழங்கப்பட்டது.
சென்னை:
த.வெ.க. தலைவர் விஜய் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.
2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 2 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முதலிடத்தை பெற்ற மாணவிகளுக்கு வைரக் கம்மல் பரிசாக வழங்கப்பட்டது.
தொகுதிவாரியாக 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 3-ம் கட்ட பரிசளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. த.வெ.க. தலைவர் விஜய் இன்று 3-ம் கட்டமாக பரிசு வழங்குகிறார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் 51 சட்டசபை தொகுதிகள் வாரியாக மாணவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.