தமிழ்நாடு செய்திகள்

நாளை "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம்..! ரெயில் மூலம் சிதம்பரம் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-07-14 19:51 IST   |   Update On 2025-07-14 19:51:00 IST
  • உங்களுடன் ஸ்டாலின் தொடக்க விழா கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நாளை நடக்கிறது.
  • சென்னையில் இருந்து பாம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டத்தை தொடங்கி உள்ளார். பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசு துறைகளின் சேவைகள், திட்டங்கள் அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்கும் "உங்களுடன் ஸ்டாலின்" என்னும புதிய திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில 15 துறைகளின் 46 சேவைகளும், நகர் புற பகுதியில் 13 துறைகள் என 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளது.

மாநிலம் முழுவதும் இந்ததிட்டத்தின் கீழ் நகர்புற பகுதிகளில் 3 ஆயிரத்து 768 முகாம்களும், ஊரக பகுதிகளில 6 ஆயிரத்து 232 முகாம்களும என மொத்தம 10 ஆயிரம் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் குறைகள் 45 நாட்களில் தீர்த்து வைக்கப்பட உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கும், இந்த முகாமில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், தகுதி உள்ள மற்றும் விடுபட்ட பெண்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இந்த முகாமில் வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் தொடக்க விழா கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நாளை (செவ்வாய்கிழமை) நடக்கிறது.

இதற்காக இன்று சென்னையில் இருந்து பாம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.

இதனால், தாம்பரம் ரெயில் நிலையத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆரவாரத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.

இன்று இரவு சிதம்பரத்துக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழ வீதியில் உள்ள தனியார் விடுதியில் தங்குகிறார்.

நாளை காலை சிதம்பரம் ஜி.எம். வாண்டையார் திருமண மண்டபத்தில உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கி வைக்கிறார்.

முன்னதாக, சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் காமராஜர் அவர்களின்திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

சிதம்பரம் அண்ணாகுளம் அருகில் அம்பேத்கர் சிலையை திறந்து வைக்கிறார். மேலும் சிதம்பரம் பைபாஸ் லால்புரத்தில் பட்டியலியன மக்களுக்காக போராடிய எல்.இளையபெருமாள் முழுவுருவ சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்து விழா மேடையில் சிறப்புரையாற்றுகிறார்.

முதலமைச்சர் வருகையையொட்டி சிதம்பரம் விழாக் கோலம் பூண்டுள்ளது. மேலும் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News