தமிழ்நாடு செய்திகள்
null

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...

Published On 2025-08-19 09:16 IST   |   Update On 2025-08-19 22:05:00 IST
  • இன்றைய முக்கிய செய்திகள்...
  • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

2025-08-19 16:15 GMT

கோவில் நிதியில் திருமண மண்டபம்: அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

2025-08-19 15:23 GMT

இந்தியா வந்துள்ள சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி-ஐ பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது மரியாதை வழிகாட்டுதலின்படி இருநாட்டு தொடர்பான உறவுகள் நிலையான முன்னேற்றம் அடைந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

2025-08-19 15:20 GMT

தவெக மாநாட்டு திடலில் குவியும் மக்கள்

மதுரை பாரபத்தியில் தவெக 2ஆவது மாநில மாநாட்டுக்காக தயாராகி வரும் திடலை பார்க்க பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

2025-08-19 13:42 GMT

வாட்ஸ்-அப் மூலம் அரசின் 50 சேவைகளை பொதுமக்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மெட்டா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

2025-08-19 13:18 GMT

ராஜஸ்தான் மாநிலத்தில் 1507 கோடி ரூபாய் கோட்டா-பண்டியில் விமான நிலையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

2025-08-19 13:16 GMT

மும்பையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. 11 மணி நேரத்தில் 200 மி.மீ. கொட்டித் தீர்த்ததால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

2025-08-19 12:56 GMT

காங்கிரஸ் எப்போதும் தனது கூட்டாளிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது; கோவாவில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இல்லை என்று ஆம் ஆத்மி தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News