Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சஞ்சய் புலிகள் காப்பகத்தில் புலி ஒன்ற மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கணவனை கொன்று உடலை டிரம்மில் போட்ட வழக்கில் காதலுடன் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கி மோசடி வழக்கில் அம்டெக் குரூப் (Amtek Group) முன்னாள் சேர்மனுக்கு ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜம்மு-காஷ்மீரில் 14 வயது சிறுமி கொலை வழக்கில், மூத்த சகோதரியை போலீசார் கைது செய்துள்ளனர். இருவரும் மாறிமாறி அடித்துக் கொண்டதில் மயக்கம் அடைந்ததால், பயந்து இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
வெளிப்படையான, தவறு அல்லாத நலத்திட்டங்களுக்காக ஏ.ஐ.-யை பயன்படுத்த உத்தர பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது.
காவிரி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு
ஒகேனக்களுக்கு நீர்வரத்து 1.35 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவில் வழிபாட்டில் பாரபட்சம்: சாலைமறியல்
இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் தனிநபருக்கு பண்ணை அம்மன் கோவில் திருவிழாவின் 8ஆவது நாள் கட்டளையை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
இதில் 7 சமுதாயத்தினர் நடத்தி வரும் கட்டளை மட்டுமே தொடர வேண்டும் என கூறி 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம்
தங்கச்சிமடத்தில் இருந்து பேரணியாக வந்த மீனவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்ததால், அவ்வழியாக வந்த ரெயில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி வேட்பாளரை வைத்து தமிழ்நாடு மீது பற்று எனக்கூற முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி தேர்தல் குறித்த கேள்விக்கு, இந்தியா கூட்டணியில் தமிழர்களுக்கு மிக நெருக்கமான ஆளுமையாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளார். எனவே, அவரது சொல்படியே செயல்படுவேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.