Tamil News Live: ரெயில் டிக்கெட் புக்கிங்கில் புதிய மாற்றம்.. அக்டோபர் 1 முதல் அமல்
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
பிரதமர் மோடியின் பிறந்தநாள் எங்களுக்கு கருப்பு நாள்: காங்கிரஸ் எம்.பி. தாக்கு
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு வர இயலாத பட்சத்தில் மாற்று ஏற்பாடாக வாக்குச்சாவடி அலுவலர்களாக அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோரை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிராம உதவியாளர், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டப் பணியாளர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
மே மாதம் பதவிக்காலம் முடிவுற்ற ஒரு நபர், ஆகஸ்ட் மாதம் எப்படி பொதுக்குழு கூட்ட முடியும்? அண்ணன் பாலு கொடுத்த கடிதம் உண்மையெனும் பட்சத்தில், அது கட்சிக்கு அவர்கள் செய்யும் அப்பட்டமான துரோகம்; கூட்டு சேர்ந்து மோசடி செய்திருப்பதாக அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடுப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் வி.எஸ். கோபு தெரிவித்துள்ளார்.
சேலத்தில் 12 தாழ்தளப் பேருந்துகள் உள்பட 17 புதிய பேருந்துகளின் சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
12% ஜிஎஸ்டி வரம்பில் இருந்த 99% பொருட்கள், இப்போது 5% வரம்புக்குள் கொண்டு வந்ததாக பெருமைப்படும் நிதியமைச்சர், அதை ஏன் 8 ஆண்டுகளுக்கு முன்பே செய்யவில்லை? இப்போது செய்துள்ள ஜிஎஸ்டி சீர்திருத்தம் |நியாயமானது என்றால், அதை முன்பே செய்யாமல், கடந்த 8 ஆண்டுகளாக 12% வரியை விதித்து நுகர்வோரைச் சுரண்டி இருக்கிறீர்கள்தானே? என நிர்மலா சீதாராமன் நோக்கி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர், எம்.பி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.