Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள்- லைவ் அப்டேட்ஸ்
இந்தியாவில் முதல் புல்லட் ரெயில்களுக்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது - பிரதமர்
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி
ஜம்முவில் உயர்மட்ட பாலம், மும்பையில் மிக நீளமான ரெயில் பாலம், பாம்பனில் செங்குத்து தூக்குப்பாலம் என பட்டியலிட்டு பிரதமர் மோடி பேசினார்.
10 ஆண்டுகளில் சாலை, விமானம், துறைமுகம், குடிநீர், கேஸ் போன்றவைகளுக்காக கட்டமைப்புகள் 6 மடங்கு அதிகரிப்பு- பிரதமர்
நாட்டின் பல துறைகளின் செயல்பாடுகளை 6 மடங்கு உயர்த்தி உள்ளோம்- பிரதமர் மோடி
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரை இயங்கும் ரெயில் மூலம் சுற்றுலா, வேலைவாய்ப்பு போன்றவை அதிகரிக்கும்- பிரதமர்
ராமேஸ்வரத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு ரெயில் சேவை கிடைப்பதன் மூலம் வளர்ச்சி மேம்படும் என பிரதமர் நம்பிக்கை.
பாம்பன் பாலப்பணிகள் பல ஆண்டுகளாக நடந்தாலும் அதனை திறந்து வைக்க வாய்ப்பு கிடைத்தது பெருமை - பிரதமர் மோடி
பாம்பன் பாலம் தான் நாட்டின் முதல் செங்குத்து தூக்கு ரெயில் பாலம் என பிரதமர் மோடி பெருமிதம்.