Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள்- லைவ் அப்டேட்ஸ்
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாம்பன் பாலத்தை உருவாக்கிய அனைவருக்கும் பாராட்டுகள்- பிரதமர் மோடி
சற்று நேரம் முன்புதான் அயோத்தியா ராமர் கோவிலில் ராமரின் நெற்றியில் சூரிய கதிர்கள் தெரிந்தன - பிரதமர் மோடி
தமிழகத்தின் சங்க இலக்கியத்திலும் ராமரை பற்றி கூறப்பட்டுள்ளது - பிரதமர் மோடி
ராமேஸ்வரம் பாரத ரத்னா கலாம் அவர்களின் பூமி, அறிவியலும் ஆன்மீகவும் இணைந்தது தான் வாழ்வு என்பதை நினைவுபடுத்துகிறது.
ராம நவமி நாளில் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன்.
ராம நவமி நன்னாளில் ஸ்ரீராம் என முழக்கமிடுங்கள் என பிரதமர் கூறிய உடன் அனைவரும் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர்.
ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில் வணக்கம் என தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.
தமிழகத்திற்கு ரூ.8300 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பிரதமரை கையசைத்து வரவேற்றனர்.
ராமேஸ்வரம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.