தமிழ்நாடு செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள்- லைவ் அப்டேட்ஸ்

Published On 2025-04-06 08:58 IST   |   Update On 2025-04-06 22:03:00 IST
2025-04-06 09:39 GMT

இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் பல மாவட்டங்களின் வளர்ச்சியை அதிகரிக்கும் - பிரதமர்

2025-04-06 09:38 GMT

தமிழ்நாட்டில் வல்லமை எவ்வளவு உயர்கிறதோ, அதே அளவு இந்தியாவில் வலிமை உயரும்- பிரதமர் மோடி

2025-04-06 09:37 GMT

தற்போது ரூ.8000 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது- பிரதமர் மோடி

2025-04-06 09:36 GMT

10 ஆண்டுகளில் கிராமப்புறம், நெடுஞ்சாலைகள் துறை மூலம் தமிழ்நாட்டில் 4,000 கி.மீ. அளவிற்கு சாலை போடப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

2025-04-06 09:35 GMT

இந்த ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2025-04-06 09:34 GMT

ரெயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 7 மடங்கு நிதி அதிகமாக வழங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

2025-04-06 09:32 GMT

பா.ஜ.க. ஆட்சிக்கு முன்னதாக தமிழக ரெயில்வேக்கு ரூ.900 கோடி மட்டுமே கிடைத்தது. தற்போது ரூ.6000 கோடிக்கு மேல் ஒதுக்கீடு- பிரதமர் 

2025-04-06 09:31 GMT

தமிழ்நாட்டிற்கு பல திட்டங்கள், கூடுதல் நிதி ஒதுக்கியும் சிலர் அழுதுகொண்டே இருக்கிறார்கள், அவர்கள் அழுதுவிட்டு போகட்டும்- பிரதமர் மோடி

2025-04-06 09:30 GMT

10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதி வழங்கப்பட்டுள்ளது- பிரதமர்

2025-04-06 09:29 GMT

காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருந்தபோது தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதியை விட கூடுதலாக நிதி வழங்கப்பட்டுள்ளது- பிரதமர்

Tags:    

Similar News