தமிழ்நாடு செய்திகள்
திருவண்ணாமலை: குறுக்கே வந்த தெருநாய்... விபத்தில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு
- ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.
- விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தமிழ்நாட்டில் தெருநாய் தொல்லை தற்போது அதிகரித்துள்ளது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு நாய்க்கு ஆதரவாக பேசியவர்களின் கருத்துக்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் அனாமிகா என்ற 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.