தமிழ்நாடு செய்திகள்

மும்மொழி கொள்கை பற்றி நீங்க கருத்து சொல்லாதீங்க - தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2025-02-17 09:14 IST   |   Update On 2025-02-17 11:58:00 IST
  • தெலுங்கானாவில் நான் இருக்கும்போது விஜய் படம் தெலுங்கில் ரிலீசானது.
  • மும்மொழிக்கொள்கை குழந்தைகளின் அறிவாற்றலுக்கு இருக்கக்கூடாதா?

பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தெலுங்கானாவில் நான் இருக்கும்போது விஜய் படம் தெலுங்கில் ரிலீசானது. இந்தியில் ரிலீசானது. அப்போ மும்மொழிக்கொள்கை, பல மொழிக்கொள்கை உங்கள் வியாபாரத்திற்கு இருக்கலாம். மும்மொழிக்கொள்கை குழந்தைகளின் அறிவாற்றலுக்கு இருக்கக்கூடாதா?

நீங்கள் சொன்னீர்களா? தமிழில் மட்டும் தான் என் படம் ரிலீசாகும் என்று.. நான் தமிழன்.. தமிழை போற்றுபவன்.. தெலுங்கில் ரிலீஸ் செய்யக்கூடாது. ரிலீஸ் செய்தால் நான் எதிர்ப்பேன் என்று சொல்லவில்லையே.

பலமொழிக்கொள்கை உங்களுக்கு தேவைப்படுவதைப்போல குழந்தைகளின் வருங்காலத்திற்கு பல மொழிக்கொள்கை தேவைப்படும்.

இதில் எல்லாம் நீங்கள் கருத்து சொல்லாதீங்க. நீங்கள் சொன்னால் அது சரியாக இருக்காது என்று கூறினார்.

Tags:    

Similar News