தமிழ்நாடு செய்திகள்
Video : உதயநிதி பிறந்தநாள் - மாணவர்களை நிற்கவைத்து வாழ்த்து சொல்ல வைத்த தி.மு.க. நிர்வாகிகள்
- சம்பவம் தென்காசி மாவட்டம் ஐந்தருவி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று உள்ளது.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனியார் பள்ளி மாணவ- மாணவர்களை மைதானத்தில் நிற்க வைத்து ஹாப்பி பர்த்-டே உதய் அண்ணா என்று தி.மு.க. நிர்வாகிகள் சொல்ல சொல்ல மாணவர்களும் சொல்கின்றனர். அப்போது மாணவர்கள் உதயநிதி ஸ்டாலினின் கட்சி சார்ந்த புகைப்படத்தை கையில் ஏந்தி நிற்கின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் தென்காசி மாவட்டம் ஐந்தருவி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று உள்ளது.