தமிழ்நாடு செய்திகள்

மக்களின் ஆதரவுக்கு ரொம்ப நன்றி... கவிபாரதி துர்கா

Published On 2024-10-29 14:04 IST   |   Update On 2024-10-29 14:52:00 IST
  • மாநாட்டை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கவி பாரதி துர்கா என்பவர் தொகுத்து வழங்கி இருந்தார்.
  • மாநாட்டை தொகுத்து வழங்கிய துர்கா தேவி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மக்களின் ஆதரவுக்கு ரொம்ப நன்றி... கவிபாரதி துர்காதமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் பலரால் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்பட்ட மாநாட்டில் தவெக தலைவர் விஜய் தனது கட்சியின் பெயர் மற்றும் கொள்கை குறித்தும் சுமார் 48 நிமிசத்திற்கு தனது முதல் அரசியல் உரையை நிகழ்த்தினார். இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டுள்ளனர். இந்த மாநாடு தமிழக அரசியல் களத்தில் ஒரு பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தவெக முதல் மாநாட்டில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் என்று பலரால் எதிர்பார்க்கப்பட்டது. மாநாட்டை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கவி பாரதி துர்கா என்பவர் தொகுத்து வழங்கி இருந்தார். இதனிடையே மாநாட்டை தொகுத்து வழங்கிய துர்கா தேவி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.



இந்த நிலையில், மக்களின் ஆதரவுக்கு ரொம்ப நன்றி என்று கவிபாரதி துர்கா வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழுக்கும், தமிழர்களுக்கும் வணக்கம். நான் தான் உங்க கவிபாரதி துர்கா. தவெக முதல் மாநில மாநாட்டின் தொகுப்பாளினி நான்தான். இந்த பெரிய மேடையை எனக்கு கொடுத்த தவெக தலைவருக்கும், பொதுச்செயலாளருக்கும் ரொம்ப கடமைப்பட்டுள்ளேன். என்னோட நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களோட ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. இந்த மாதிரி சப்போர்ட் தான் என்னை மாதிரி ஒரு சாமானிய பெண்ணுக்கு உத்வேகமாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ரொம்ப நன்றிங்க... நான் எதிர்பார்க்காத அளவுக்கு எனக்கு நிறைய சப்போர்ட் கிடைத்திருக்கு... ரொம்ப ரொம்ப நன்றி. ப்ளீஸ் சப்போர்ட் மீ என்று கூறினார். 

Tags:    

Similar News