பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நன்றி
- கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
- இந்நாளின் இனிப்பு இது என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதற்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து செய்தி அளித்ததோடு, தொலைபேசியிலும் வாழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் இனிய நண்பர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றி. இந்நாளின் இனிப்பு இது என்று குறிப்பிட்டுள்ளார்.
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், விஜய் வசந்த், ரவிக்குமார் ஆகியோருக்கும் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.