தமிழ்நாடு செய்திகள்

தமிழக சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

Published On 2025-04-29 15:30 IST   |   Update On 2025-04-29 15:30:00 IST
  • 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த மாதம் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
  • மார்ச் 17-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. நாளை வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் சட்டசபை கூட்டத் தொடர் நிறைவடைந்தது. இதனைத் தொடரந்து சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மாதம் 14ஆம் தேதி தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடர் ஏப்ரல் 30 வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்திருந்தார்.

மார்ச் 17-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதமும், மார்ச் 21-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும் எனவும் சபாநாயகர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி நாளான இன்று உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடி பிரதிநிதித்துவம் சட்ட முன்வடிவு, கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டன. கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News