தமிழ்நாடு செய்திகள்
SSLC பொதுத்தேர்வு முடிவுகள்- சிவகங்கை முதலிடம்
- வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்.
- மாணவிகள் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை :
2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். தேர்வில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.70 சதவீதம், மாணவிகள் 95.13 சதவீதம் ஆகும். வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவிகள் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாடம் வாரியாக 100-க்கு 100 எடுத்த மாணவர்கள் விவரம்:-
தமிழ் -8 பேர், ஆங்கிலம்- 346 பேர், கணிதம் - 1,996 பேர், அறிவியல்- 10,838 பேர், சமூக அறிவியல்- 10,256 பேர் ஆவர்.
முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்:-
சிவகங்கை- 98.3 சதவீதம், விருதுநகர்- 97.5 சதவீதம், தூத்துக்குடி- 96.8 சதவீதம், கன்னியாகுமரி 96.7 சதவீதம், திருச்சி- 96.6 சதவீதம்.