தமிழ்நாடு செய்திகள்

தமிழக மீனவர்கள் மீண்டும் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

Published On 2024-12-08 07:33 IST   |   Update On 2024-12-08 07:33:00 IST
  • கைதான மீனவர்களை காங்கேசன் துறைமுக முகாமுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
  • கடந்த 3-ந்தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டியதாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் கைதான மீனவர்களை காங்கேசன் துறைமுக முகாமுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3-ந்தேதி நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில் தற்போது 8 மீனவர்களை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News