தமிழ்நாடு செய்திகள்

தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

Published On 2025-07-01 07:25 IST   |   Update On 2025-07-01 07:25:00 IST
  • கடந்த 2 நாட்களில் 15 மீனவர்கள் மற்றும் 2 படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
  • மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த 2 நாட்களில் 15 மீனவர்கள் மற்றும் 2 படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News