தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே 17-ந்தேதி சிறப்பு ரெயில்கள்
- ரெயில்கள் பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
- வருகிற 22-ந்தேதி தாம்பரம்-காட்டாங்கொளத்தூர் இடையே 5 பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்கள் கிளாம்பாக்கம் சென்று பஸ் ஏறுவார்கள். இதனால் தாம்பரம் முதல் கிளாம்பாக்கம் வரை அதிக கூட்ட நெரிசல் காணப்படும்.
இதைத் தவிர்க்க தாம்பரம் முதல் கூடுவாஞ்சேரி வரையில் வருகிற 17-ந் தேதி 3 பயணிகள் சிறப்பு ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து வருகிற 17-ந்தேதி இரவு 7.45, 7.53, 8.10 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். இந்த ரெயில்கள் பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
இதே போல் வருகிற 22-ந்தேதி தாம்பரம்-காட்டாங்கொளத்தூர் இடையே 5 பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி வருகிற 22-ந்தேதி காட்டாங்கொளத்தூரில் இருந்து அதிகாலை 4, 4.30, 5, 5.35, 6.39 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் தாம்பரத்தை சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயில்கள் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.