தமிழ்நாடு செய்திகள்
குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது - சென்னை ஐகோர்ட் உத்தரவு
- அனுமதி பெறாமல் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தப்படுகிறதா என காவல்துறை கண்காணிக்க வேண்டும்
- சிலரின் காதுகளுக்கு தெய்வீகமாக விளங்கும் இசை, மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும்.
மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், அனுமதி பெறாமல் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தப்படுகிறதா என்பதை காவல்துறை கண்காணிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
சிலரின் காதுகளுக்கு தெய்வீகமாக விளங்கும் இசை, மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்று வழக்கின் விசாரணையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்தார்.