தமிழ்நாடு செய்திகள்

அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறை சோதனை- செல்வப்பெருந்தகை

Published On 2025-08-16 13:55 IST   |   Update On 2025-08-16 13:55:00 IST
  • எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் பிளவுபடுத்தவும் பா.ஜ.க. அரசு செய்யும் சூழ்ச்சிதான் அமலாக்கத்துறை சோதனை.
  • இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பையும் சிதைக்கக் கூடியவை.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், தி.மு.கட்சியின் மூத்தத்தலைவருமான ஐ.பெரியசாமி சம்பந்தப்பட்ட இடங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது.

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் பிளவுபடுத்தவும் பா.ஜ.க. அரசு செய்யும் சூழ்ச்சிதான் அமலாக்கத்துறை சோதனை. இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பையும் சிதைக்கக் கூடியவை. அமலாக்கத்துறையினரின் இத்தகைய நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News