தமிழ்நாடு செய்திகள்

தாய் மொழி வழிபாடு என்பது இனத்தின் அடிப்படை உரிமை - சீமான்

Published On 2025-06-14 11:24 IST   |   Update On 2025-06-14 11:24:00 IST
  • தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட தமிழில் இறை வழிபாடு நடத்தப்படுகிறது.
  • முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு கிடையாது என்பது எவ்வளவு பெரிய வரலாற்று கொடுமை.

தூத்துக்குடி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு என்பது இனத்தின் அடிப்படை உரிமை.

* தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட தமிழில் இறை வழிபாடு நடத்தப்படுகிறது.

* தமிழ்க்கடவுள் முருகனுக்கு தமிழ்மொழியில் குடமுழுக்கு நடக்காது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

* முருகனே தமிழ் தான், முருகனை விட்டு தமிழை எப்படி பிரிப்பீர்கள்.

* எங்கள் சமயம் சைவம். சைவத்தில் இருந்து தமிழை பிரிக்க முடியாது. தமிழில் இருந்து சைவத்தை பிரிக்க முடியாது.

* முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு கிடையாது என்பது எவ்வளவு பெரிய வரலாற்று கொடுமை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News