தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.வையும் சேர்த்து நாங்கள் தான் வளர்க்க வேண்டி இருக்கு- சீமான்

Published On 2025-01-24 11:53 IST   |   Update On 2025-01-24 12:58:00 IST
  • தி.மு.க.வில். இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள்.
  • பெரியாரை எதிர்த்து அண்ணா வெளியில் வந்து தி.மு.க.வை. தொடங்கினார்.

கோவை:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்களும், மாற்றுக்கட்சியினரும் இன்று தி.மு.க.வில் இணைந்துக் கொண்டனர்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

* கட்சியில் சேர்ந்த பிறகு தான் எண்ணிக்கை தெரியும். சேருவதற்கு முன்பு எப்படி தெரியும்.

* மகிழ்ச்சி... தி.மு.க.வில். இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள்...

* தி.மு.க.வையும் சேர்த்து நாங்கள் தான் வளர்க்க வேண்டி இருக்கிறது.

* துரைமுருகன் கூறியது என்னை பற்றி இல்லை. அண்ணாவையும், அவரது தலைவர் கலைஞரை சொல்லியிருக்கிறார்.

* பெரியாரை எதிர்த்து அண்ணா வெளியில் வந்து தி.மு.க.வை. தொடங்கினார்.

* A டீமாக தி.மு.க. இருப்பதால் நான் B டீம் ஆகிவிட்டேன் என்றார். 

Tags:    

Similar News