தமிழ்நாடு செய்திகள்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பு

Published On 2025-04-06 10:21 IST   |   Update On 2025-04-06 10:21:00 IST
  • தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க பா.ஜ.க. தீவிரம் காட்டி வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
  • கூட்டணி இல்லை என கூறி வரும் சீமானை கூட்டணிக்குள் கொண்டு வர பா.ஜ.க. விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

2026 சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி வருகிறார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிர்மலா சீதாராமன் - சீமான் சந்திப்பு நடந்துள்ளது. தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க பா.ஜ.க. தீவிரம் காட்டி வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

கூட்டணி இல்லை என கூறி வரும் சீமானை கூட்டணிக்குள் கொண்டு வர பா.ஜ.க. விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் சந்தித்து பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News