தமிழ்நாடு செய்திகள்
null

தளபதியா தலைவிதியா... TVKவா டீ விற்கவா... அணிலே ஓரமா போய் விளையாடு - பங்கமாய் கலாய்த்த சீமான்

Published On 2025-08-18 08:27 IST   |   Update On 2025-08-18 08:37:00 IST
  • த.வெ.க. தொண்டர்களிடம் உங்கள் கொள்கை என்ன என்று கேட்டால் தளபதி தளபதி என்று கத்துகின்றனர்.
  • எதுக்கு வந்தீங்க என்று கேட்டால் TVK TVK என்று கத்துகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கொனேரிகொன் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், த.வெ.க. தொண்டர்களை கிண்டலடித்து பேசியது மக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், "த.வெ.க. தொண்டர்களிடம் உங்கள் கொள்கை என்ன என்று கேட்டால் தளபதி தளபதி என்று கத்துகின்றனர். எனக்கோ அது தலைவிதி தலைவிதி என்று கேட்கிறது. சரி எதுக்கு வந்தீங்க என்று கேட்டால் TVK TVK என்று கத்துகின்றனர். டீ விற்கவா இவ்வளவு பேர் கிளம்பி வந்துருக்கீங்க..

புலி வேட்டைக்கு செல்லும் வழியில் அணில்கள் குறுக்கே ஓடுகின்றன. பத்திரமாக மரத்தில் ஏறி இருங்கள். அணிலே ஓரமா போய் விளையாடு, குறுக்கே வராதே. அணிலை வேட்டையாடி சாப்பிட்டால் புலிக்கு என்ன மரியாதை" என்று கிண்டலாக தெரிவித்தார்.

இணையத்தில் விஜய் ரசிகர்களை அணில் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வரும் நிலையில் த.வெ.க. தொண்டர்களை அணில் என்று சீமான் கிண்டலடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News