தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகனான சபரீசனின் தந்தை காலமானார்

Published On 2025-09-11 08:42 IST   |   Update On 2025-09-11 09:19:00 IST
  • வேதமூர்த்தி உடல் அஞ்சலிக்காக கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
  • இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 81.

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் சபரீசன்- செந்தாமரை தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சபரீசனின் தந்தை வேதமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக ஓஎம்ஆரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவில் காலமானார்.

வேதமூர்த்தி உடல் அஞ்சலிக்காக கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ளது. அண்மையில் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அண்ணன் மு.க. முத்து உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

Tags:    

Similar News