தமிழ்நாடு செய்திகள்

என் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி - ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

Published On 2025-07-11 13:57 IST   |   Update On 2025-07-11 14:41:00 IST
  • ராமதாஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.
  • கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் விருத்தாசலம் பொன்னேரி பைபாஸ் சாலையில் உள்ள மகாலில் நடைபெற்றது.

விருத்தாசலம்:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். அதன்படி நேற்று அவர் கும்பகோணத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று விருத்தாசலம் பொன்னேரி பைபாஸ் சாலையில் உள்ள திருமண மகாலில் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்டு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறுகையில்,

என் வீட்டிலேயே, நான் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே ஒட்டு கேட்கும் கருவியை வைத்துள்ளனர்.

அதை யார், எதற்காக வைத்தார்கள் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அது லண்டனில் இருந்து வந்தது என்று அவர் குற்றம்சாட்டினார்.

Tags:    

Similar News